தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்

South Indian Social History Research Institute

சங்ககால அரசர்கள் திணைக் குடிகளா?

ஆய்வாளர் எஸ். இராமச்சந்திரனின் கருத்துகள் - காணொலி

(நன்றி: Z News)

கருப்பர் கூட்டத்திற்கு ஆதரவு அளித்த ஜகத் கஸ்பருக்குச் சவுக்கடி பதில்

ஆய்வாளர் எஸ். இராமச்சந்திரனின் கருத்துகள் - காணொலி

(நன்றி: Z News)

இராஜ ராஜ சோழன் தம் நாட்டு மக்களைக் காட்டுமிராண்டிகள் என்று குறிப்பிட்டாரா?

- - -இராஜ ராஜ சோழன் சீனாவுக்கு அனுப்பிய தூதுக் குழுவினர் வசம் ஒரு கடிதத்தைக் கொடுத்தனுப்பியதாகவும் அக்கடிதத்தில் இத்தகைய ஒரு குறிப்பு இருப்பதாகவும் ஒரு செய்தி வரலாற்று ஆய்வாளர்களிடையே உலவுகிறது. அது குறித்துத் தெளிவுபடுத்துவதற்காகவே இக்கட்டுரை எழுதப்படுகிறது- - -- - -<தொடர்ச்சி>

திருமண ஏசல் பாடல்கள்

எஸ். இராமச்சந்திரன், சசிகலா கஸ்தூரிரங்கன் ஆகியோர் எழுதிய இந்த ஆய்வுக் கட்டுரையைச் சொல்வனம் வெளியிட்டுள்ளது.

வணிகம் மூலமாக பாரத ஒற்றுமை

எஸ். இராமச்சந்திரன், நரசய்யா, அஷ்வின் கிருஷ்ணா உரையாடல்


(நன்றி: தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சி)

சிலப்பதிகாரத்தின் காலம்

எஸ். இராமச்சந்திரன் எழுதிய இந்த ஆய்வுக் கட்டுரையைச் சொல்வனம் வெளியிட்டுள்ளது.

கீழடி ஆய்வின் ஆதாரங்களும் உண்மையும்

எஸ். இராமச்சந்திரனுடன், ஓகை நடராஜன் உரையாடல்


(நன்றி: ஒரே நாடு தொலைக்காட்சி)

பேச்சுக் கச்சேரி 2018

சோழர் மெய்க்கீர்த்தி - எஸ். இராமச்சந்திரன் உரை


(நன்றி: Tamil Heritage Trust.)

Tamiraparani - the Lifeline of Tirunelveli

S. Ramachandran on Tamiraparani. (Suganthy Krishnamachari / The Hindu - 11/Oct/2018.)

தீபாவளியான தீபத் திருநாள்

தீபாவளி தொடர்பான எஸ். இராமச்சந்திரனின் கருத்துகளை ராணி (தீபாவளி மலர் 2016) வெளியிட்டுள்ளது.

ஆவுடையார் கோயிலைக் கட்டியது யார்?

எஸ். இராமச்சந்திரன் எழுதிய இந்த ஆய்வுக் கட்டுரையைத் தினமலர் (2/மார்ச்/2014) வெளியிட்டுள்ளது.

கம்பன் எழுதாதவை

எஸ். இராமச்சந்திரன் எழுதிய இந்தக் கடிதத்தை எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளம் வெளியிட்டுள்ளது.

காமவேள் விழவு: சங்க காலத்தில் காதலர் தினம் (செம்மைப்படுத்தப்பட்ட வடிவம்)

2008ஆம் ஆண்டு தமிழினி இதழில் எழுதப்பட்ட கட்டுரையின் செம்மைப்படுத்தப்பட்ட வடிவம்.

கோயிலுக்குள் நுழையாதே! கமுதிக் கோயில் நுழைவு வழக்குத் தீர்ப்பு 1899


தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனத்தின் இரண்டாம் வெளியீடாக, ஆய்வாளர் ப்ரவாஹன் எழுதியுள்ள இந்த ஆய்வு நூல் இன்று (19/01/2013) வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை புத்தகக் காட்சியில் காலச்சுவடு அரங்கில் இந்நூல் கிடைக்கும்.

ISBN: 978-81-910023-1-7
பக்கங்கள்: 296
விலை: ரூ. 220/-

குமரி மாவட்டச் சான்றோர் சமூக வரலாற்றில் ஆய்வு செய்யப்பட வேண்டியவை

எஸ். இராமச்சந்திரன் எழுதிய இந்த ஆய்வுக் கட்டுரையைச் சொல்வனம் வெளியிட்டுள்ளது.

பன்னிரு திங்களும் பௌர்ணமி மீன்களும் - எஸ். இராமச்சந்திரன்

தமிழ் மாதங்களின் பெயர்களுக்கும், விண்மீன்களின் பெயர்களுக்கும் தொடர்பு இல்லை என்ற கருணாநிதியின் பிதற்றலுக்கு ஆதாரபூர்வமான மறுமொழியைத் தமிழ்ஹிந்து வெளியிட்டுள்ளது.

உயிரினும் சிறந்தன்று நாணே

மார்ச் 2011 காலச்சுவடு இதழில் தமிழர் பண்பாடு குறித்து எழுத்தாளர் பிரபஞ்சன் எழுதிய கட்டுரைக்கு, ஆய்வாளர் ப்ரவாஹன் எழுதிய எதிர்வினை காலச்சுவடு ஜூலை 2011 இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Book Review

How to look at a Social Institution - Book Review by Aravindan Neelakandan

புத்தக வெளியீட்டு விழா - ஒரு பதிவு

புத்தக வெளியீட்டு விழா பற்றிய பதிவு ஒன்றைத் திண்ணை இணைய இதழ் வெளியிட்டுள்ளது.

புத்தக அறிமுகம்

"தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள்" புத்தகம் பற்றிய அறிமுகம் ஒன்றினைத் தமிழ்ஹிந்து வெளியிட்டுள்ளது.

(நன்றி: அரவிந்தன் நீலகண்டன்.)

புத்தக வெளியீட்டு விழா பற்றிய பதிவு

"தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள்" புத்தக வெளியீட்டு விழா பற்றிய ஒரு பதிவினை இங்கு காணலாம்.

(நன்றி: சந்திரசேகரன், ரீச் ஃபவுண்டேஷன்.)

தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள்


2010இன் தொடக்கத்திலேயே வெளிவந்திருக்க வேண்டிய இந்த ஆய்வு நூல் (ISBN: 978-81-910023-0-0) தவிர்க்க
முடியாத சில காரணங்களால் டிசம்பர் 2010இல்தான் அச்சிடப்பட்டுள்ளது. இப்புத்தகத்தின் அட்டைப் படம் இது.தோள்சீலைக் கலகக் காட்சி ஒன்றை வண்ணச் சித்திரமாக வரைந்தவர்
ஓவியர் ஆர்.செ.


மையொற்றி மகானுபாவர்களின் மயக்கப் புலம்பல்

ஆய்வாளர்கள் ப்ரவாஹனும், சாமிநாதனும் இணைந்து எழுதியுள்ள மையொற்றி மகானுபாவர்களின் மயக்கப் புலம்பல் என்ற கட்டுரையைத் தமிழ்ஹிந்து வெளியிட்டுள்ளது.

காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி

தமிழக வரலாற்றில் இராஜராஜ சோழன் தொடக்கிவைத்த சில போக்குகள், அவை சுட்டிக்காட்டும் நுண்ணரசியல் ஆகியவை பற்றி விவாதிக்கும் எஸ். இராமச்சந்திரனின் ஆய்வுக் கட்டுரை சொல்வனம் இதழ் 35இல் வெளிவந்துள்ளது.

தரவுகளும் பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டுகளும்

ஆய்வாளர் அ. கணேசன் எழுதிய "தரவுகளும் பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டுகளும்" என்ற எதிர்வினை காலச்சுவடு ஏப்ரல் 2010 இதழில் (பக். 7-8) வெளியிடப்பட்டுள்ளது. இதை எந்த நீக்கமும் செய்யாமல் அப்படியே வெளியிட்ட காலச்சுவடு இதழுக்கு நன்றி.- - -<தொடர்ச்சி>

ஆயிரத்தில் ஒருவன்: சர்ச்சைகளும் சரித்திரமும்சமீபத்தில் வெளிவந்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தில் தமது பங்களிப்பு, அப்படம் தொடர்பாக எழுப்பப்பட்டுள்ள வரலாற்றுச் சர்ச்சைகள் குறித்து ஆய்வாளர் எஸ். இராமச்சந்திரனுடனான நேர்காணலைச் சொல்வனம் இதழ் வெளியிட்டுள்ளது.

அணிகலன் பெருக்கும் அக்ஷய த்ரிதியை

- - -அக்ஷய த்ரிதியை என்ற நிகழ்வுக்கு என்ன வரலாற்றுப் பின்னணி இருக்கின்றது என்பது பெரும்பாலானோருக்குத் தெரியாது. கேரள மாநிலத்தில் ஓணம் விழாவும் தமிழகத்தில் தைப் பொங்கலும் கொண்டாடப்படுவது போல மராட்டிய மாநிலத்தில் அக்ஷய த்ரிதியை முதன்மையான ஒரு விழாவாக நெடுங்காலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.- - -<தொடர்ச்சி>

தொல்காப்பியத்தில் இடைச்செருகல்களா?

ஆய்வாளர்கள் எஸ். இராமச்சந்திரனும் ப்ரவாஹனும் இணைந்து எழுதியுள்ள தொல்காப்பியத்தில் இடைச்செருகல்களா? என்ற ஆய்வுக் கட்டுரை சொல்வனம் இதழ் - 16இல் வெளியிடப்பட்டுள்ளது. வாசகர்கள் அனைவரும் இக்கட்டுரையைப் படித்துப் பயனுற வேண்டுகிறோம்.

வள்ளுவரும் ஒழுக்கமும்

ஆய்வாளர் ப்ரவாஹன் எழுதிய ‘வள்ளுவரும் ஒழுக்கமும்’ என்ற கட்டுரை சொல்வனம் இதழ் 11இல் வெளிவந்துள்ளது. வாசகர்கள் படித்துப் பயனுற வேண்டுகிறோம்.- - -<தொடர்ச்சி>

மாதொரு பாகரின் ஆதிமூலம்

அர்த்த நாரீஸ்வரர் என்றும், பெண்ணமருந் திருமேனி என்றும், ஏழை பங்காளன் என்றும் கற்பனை நயத்துடன் வழங்கப்படுகிற மாதொரு பாகர் வடிவம் முதன்மையான சிவ மூர்த்தங்களுள் ஒன்றாகும்...- - -<தொடர்ச்சி>

புத்தக அறிமுகம்

ஆய்வாளர்கள் எஸ். இராமச்சந்திரன் மற்றும் அ. கணேசன் ஆகியோர் இணைந்து எழுதியுள்ள தோள் சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள் என்ற தலைப்பிலான புத்தகம் தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனத்தினால் வெளியிடப்பட உள்ளது. 19ஆம் நூற்றாண்டில், தென் தமிழகத்தில் நடந்த குறிப்பிடத்தக்க சமூக வரலாற்று நிகழ்வான தோள் சீலைக் கலகம் பற்றிய பல அரிய உண்மைகளை வெளிக்கொணரும் இப்புத்தகத்தின் அறிமுக அத்தியாயம் சொல்வனம் இதழ் - 8இல் வெளியிடப்பட்டுள்ளது. SISHRI வாசகர்கள் அனைவரும் சொல்வனம் இணைய இதழைப் படித்துப் பயனுற வேண்டுகிறோம்.

அ. கணேசன் நாடார் அறிக்கை

நாகர்கோவில் அனார்ய சமாஜ் வெளியிட்டுள்ள "திராவிடரும் திராவிட இந்தியாவும்" நூல் குறித்து திரு. அ. கணேசன் நாடார் வெளியிட்டுள்ள அறிக்கை ’தமிழ்ஹிந்து’ இணைய தளத்தில் ”திராவிடரும் திராவிட இந்தியாவும்: அவதூறும் பதிலடியும்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது

பண்பாட்டைப் பேசுதல் - ஜெயமோகன்

எஸ். இராமச்சந்திரனின் “இராமானுஜர் பங்கேற்ற அரங்க நிகழ்வுகள் - வரலாறா? கற்பனையா?” ஆய்வுக் கட்டுரை பற்றி எழுத்தாளர் ஜெயமோகனின் கருத்துகள்.- - -

இராமானுஜர் பங்கேற்ற அரங்க நிகழ்வுகள் - வரலாறா? கற்பனையா?

முனைவர் இரா. நாகசாமி எழுதியுள்ள "Ramanuja - Myth and Reality" என்ற நூலில் சொல்லப்பட்டுள்ள கருத்துகளுக்கான எதிர்வினை.- - -<தொடர்ச்சி>

ஆதிச்சநல்லூர் ஆய்வுகள்

- - -இப்பகுதியில் கி.பி. 17ஆம் நூற்றாண்டில் ஆதிச்சநாடாழ்வான் என்ற பட்டப் பெயருடைய நிலைமைக்கார நாடார் குடும்பத்தவர் இருந்துள்ளனர் என்பதற்குக் கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன.- - -<தொடர்ச்சி>

திருமகள் உற்பத்தி

- - -“யானையின் புறக் கழுத்திலே ஏறிய திருமகள் விளங்குகின்ற இந்திரனும்” என்று நச்சினார்க்கினியர் எழுதியுள்ள உரை, ஐயத்துக்கு இடமற்ற வகையில் திருமகள் இந்திரனுக்குரியவள் என்பதை உணர்த்திவிடுகிறது.- - -<தொடர்ச்சி>

நாகராஜாவும் நாகரம்மனும்

- - -நாகராஜா என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் தெய்வத்தை வழிபட்டவர்கள் சமண சமயத்தவராவர். இத்தெய்வத்தின் சிலை கடுசாக்கரை அல்லது நவபாஷாணத்தால் ஆனதென்பதால் இச்சிலைக்கு எந்நேரமும் கவசம் அணிவிக்கப்படுவதாலும், அபிஷேகம் போன்றவை நடைபெறுவதில்லையாதலாலும் இச்சிற்பத்தினை முழுமையாகப் பார்த்தவர்கள் குறைவே.- - -<தொடர்ச்சி>

முத்தூற்றுக்கூற்றம் - கள ஆய்வு

- - -இக்கல்வெட்டில் "முத்தூற்று நாட்டுக் கள்ளிக்குடி" என்ற தொடரினைப் படித்தவுடனே முத்தூற்றுக்கூற்றத்துத் தலைநகர் அண்மையில்தான் உள்ளது என்பது உறுதியாயிற்று. முத்தூற்றுநாடு என்பதே முத்துநாடு எனத் தற்போது வழங்கப்படுகிறது என்ற உண்மை தெளிவாயிற்று.- - -<தொடர்ச்சி>

பண்டைத் தமிழகத்தில் இந்திர வழிபாடு

- - -நிலம் பெண்ணுடலுடன் ஒப்பிடப்பட்டதால், மழைக் கடவுளான இந்திரன் நிலமகளுடன் புணர்ந்து பயிர்களைப் படைப்பதாக நம்பப்பட்டது. இந்நம்பிக்கையின் அடிப்படையில் இந்திரனே உலகைப் படைத்ததாக ரிக்வேதம் குறிப்பிடுகிறது.- - -<தொடர்ச்சி>

பகுத்தறிவின் வளர்ச்சி நாத்திகம்!

- - -திருநாவுக்கரசின் ‘தகுதி'க்கு, அவரின் ஆய்வின் ஆழத்திற்கு, ‘ஆரிய மாயை' ஓர் ஆராய்ச்சிக் கட்டுரைதான் என்பதில் ஐயமில்லை.- - -<தொடர்ச்சி>

வரலாற்று நோக்கில் வர்மக் கலை

- - -தென்பாண்டி நாட்டில் வர்ம சிகிச்சை முறையின் பிரிவான எலும்பு முறிவு மூட்டுப் பிறழ்வு ஆகியவற்றைக் குணப்படுத்தும் பாரம்பரியச் சிகிச்சை முறையில் சான்றோர் குலத்தவர் மட்டுமே நிபுணத்துவம் உடையோராக உள்ளனர்.- - -<தொடர்ச்சி>

New Inscription on Raja Desingh's Clan

---S Ramachandran said the inscription dates back to 1754 AD and was found at an ancient Chola period Shiva temple in Parameswarimangalam a village near Sadurangapattinam.---[more]

(Courtesy: V. Gangadharan / The New Indian Express, March 14, 2009)

கொற்றவை மலை ஐயன்

- - -ஐயனார் வழிபாடு என்பதே வேத கால வருணன் வழிபாட்டுடனும் ஜொராஸ்ட்ரிய சமய அஹுரமஸ்தா வழிபாட்டுடனும் மிக நெருங்கிய உறவுடைய வழிபாடாகும். அஹுரமஸ்தா என்ற சொல் அசுரர் தலைவன் எனப் பொருள்படும். அதாவது, சுரா பானம் அருந்தாத, பிரபஞ்ச ஒழுங்கைக் காக்கும் தலைவன் என பாரசீகத்தின் கிளை மொழியாகிய குஜராத்திப் பார்சி மொழியில் வருணன் குறிப்பிடப்பட்டான்....- - -<தொடர்ச்சி>

தைந்நீராடல்

---பக்தி இலக்கியங்களில் பாவை நோன்பாகப் பரிணமித்த சங்ககாலத் தைந்நீராடல் மரபுக்கு அடிப்படையாக இருந்த நம்பிக்கைகள் என்ன என்பது குறித்த என்னுடைய கருத்துகளை இங்குப் பதிவு செய்ய விழைகிறேன்...- - -<தொடர்ச்சி>

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகச் சிற்பத் துறை நடத்திய
தமிழகக் கலை மற்றும் இலக்கியங்களில் மாதொருபாகர் கருத்தரங்கம் (21-ஜனவரி-2009)

கருத்தரங்கத் தொகுப்புரை: எஸ். இராமச்சந்திரன்


Download (9.34 MB)

கள ஆய்வு: மூன்றாம் குலோத்துங்கன் காலத்து பிரம்மசாத்தன் சிற்பம்

- - -இச்சிற்பத்தினை மாமல்லபுரத்தில் தர்மராஜரதம் என வழங்கப்படும் திரிமூர்த்தி குகையிலுள்ள பிரம்மசாத்தன் சிற்பத்துடன் ஒப்பிடலாம். தமிழகத்தில் பல்லவர் காலத்திலிருந்து முருகனைப் பிரம்மசாத்தனாக வழிபடுகிற மரபு தொடர்ந்துவந்துள்ளது என அறிய முடிகிறது...- - -<தொடர்ச்சி>

தமிழ் நாற்பாலும் வட இந்திய சதுர் வர்ணமும்

- - -சங்க இலக்கியங்களில் மேலோர் மூவர்க்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. வேளாளர் குறித்த குறிப்புகள் மிகக் குறைவே. இவ்வாறாக பல்வேறு தரவுகளை ஒப்புநோக்கையில் தமிழ் மரபில் கூறப்பட்டுள்ள நாற்பாலும் வட மரபில் சொல்லப்பட்டுள்ள நான்கு வர்ணமும் ஒன்றே என்ற முடிவுக்கு நாம் வரமுடிகிறது...- - -<தொடர்ச்சி>

கிழக்கு பதிப்பக மொட்டை மாடிக் கூட்டம் (26/டிசம்பர்/2008)

                                                                                              ஆய்வாளர் ப்ரவாஹன் உரை                     விவாதம்


முதற் குலோத்துங்க சோழன் சுங்கம் தவிர்த்தது ஏன்?

---சமூக அந்தஸ்தும் பாரம்பரியப் பெருமையும் மிகுந்த அரச குலப் படைவீரர்கள் வணிகர்களுக்கு அளிக்கின்ற பாதுகாப்புக்காக வணிகர்கள் கட்டாயமாகச் செலுத்தவேண்டிய கட்டணமே சுங்க வரியாகும். மாறாக, வணிகர்கள் தாங்களாகவே தம்முடைய பணியாளர்களுக்கு வழங்குகின்ற கூலி போன்றதே சுங்க வரிக்கு மாற்றாக வணிகர்கள் தற்போது ஏற்றுக்கொள்ள நேர்கிற புதிய செலவினமாகும்...- - -<தொடர்ச்சி>

வைதிக இந்து சமயமும் திருக்குறளும்: ஓர் ஆய்வுச் சிக்கல்

---திருக்குறள் உட்பட அனைத்துப் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் 'வேளாண் வேதம்' என அழைக்கப்படுவதன் பின்னணி என்ன என்பதை ஆராய்ந்தாலே சங்க காலச் சமூக வாழ்வியல் வேறு; திருவள்ளுவர் சித்திரிக்க முயலும் வாழ்வியலும், உருவாக்க முயலும் வரையறைகளும் வேறொரு சமூகத்துக்குரியவை என்ற விவரம் புரியும்...- - -<தொடர்ச்சி>

வெண்பாக்கம்... இன்னொரு எகிப்து?

தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவன ஆய்வாளர்கள் நடத்திய வெண்பாக்கம் கள ஆய்வு குறித்து தினமலர் (வாரமலர்) கட்டுரை.- - -<தொடர்ச்சி>

Colossus Tamil and the dwarfs

- - -Up to 16th century, Malayalam didn’t evolve as a separate language and it was only a form of Tamil, called malainattuk kodun thamizh. We hasten to add that the process of evolving in to separate language took nearly 1000 years and took full shape in the 16th century. Even the Malayalam script evolved out of the vattezhuththu that prevailed in southern Tamil Nadu and the grantha (script) used for writing Sanskrit.- - -<தொடர்ச்சி>

புதிய கண்டுபிடிப்பு: சோழர் காலக் காளாபிடாரி (பத்ரகாளி) சிற்பம்

தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டையை அடுத்துள்ள பசுபதிகோயில் அருகில் கி.பி. 850- 900ஆம் ஆண்டைச் சேர்ந்த சோழர் காலக் காளாபிடாரி (பத்ரகாளி) சிற்பம் ஒன்றைக் கண்டறிந்துள்ளோம்.- - -<தொடர்ச்சி>

பார்ப்பான் x பறையன் - ஒரு பகுத்தறிவுப் பார்வை

- - -வேளாளர்கள் தலைமையில், பங்களிப்பில் உருவான சென்னைப் பல்கலைக்கழகத்தின் (இதற்கு முதலியார் பல்கலைக்கழகம் என்ற துணைப் பெயரும் உண்டு) Tamil Lexicion, தமிழர்கள் யார் என்பதற்கு ‘பறையனொழிந்தவர்கள்' என்று எழுதப்பட்டிருப்பதிலிருந்தே தீண்டாமையை யார் கற்பித்திருப்பர் என்பதை எளிதில் ஊகித்துவிடலாம்.- - -<தொடர்ச்சி>

குறிஞ்சிக் கந்தரும் கலிங்கப் பாணரும்

- - -சங்க இலக்கியங்கள் பாணர் மரபை அடித்தளமாகக்கொண்டு தோன்றியவையே எனினும் அவை ஆணாதிக்க அவைகளில் அரங்கேறிய செவ்வியல் இலக்கியங்களாதலால், அவற்றில் முழுமையான யதார்த்தத்தைக் காண முயல்வது இதுவரை தமிழறிஞர்களுள் பலர் புரிந்து வந்திருக்கிற தவறு என்பதை உணர முடிந்தது...- - -<தொடர்ச்சி>

The Concept of Lakshmi in Sangam Literature
(National Seminar on Lakshmi - In Art, Thought and Literature - 12/7/2008 - Coimbatore)
S Ramachandran's talk (English)

வர்ணமும் சாதியும்

- - -இன்றைய நிலையில் சாதிதான் உள்ளது; வர்ணம் என்பது எந்த வடிவிலும் நிலவிக் கொண்டிருக்கவில்லை. இது எதைக் காட்டுகிறது? வர்ணத்தில் இருந்து சாதி தோன்றியது என்றா அல்லது வர்ணத்துக்கும் முற்பட்டது சாதி என்றா?...- - -<தொடர்ச்சி>

சித்தம் கலங்கிய பொதிகைச் சித்தர்

- - -முதலில் பிபிலியோதெரபி தேவைப்படுவது பொதிகைச் சித்தருக்குத்தான். அதற்குப் பிறகும் இராமச்சந்திரனின் கட்டுரைகளில் ‘பலானது' மட்டுமே அவருக்குத் தெரிகிறதென்றால் அதற்குப் பெயர்தான் ”வேளாள சாதி வெறி.”...- - -<தொடர்ச்சி>

ஆய்வாளர் ப்ரவாஹன் கட்டுரை மீதான விவாத அரங்கம்
30/8/2008 - காஞ்சிபுரம்
                                                            Pravaahan - 1                            Pravaahan - 2                            Ragavaraj
Megalithic Burial sites of Venpakkam
வெண்பாக்கம் கள ஆய்வு

தாமஸைக் கொன்றது யார்?

பேதக மறுத்தல் - எஸ். இராமச்சந்திரன்

பகுத்தறிவு - இந்து மதம் - பிறப்பு அடிப்படை

- - -அம்பேத்கர் அவர்கள், “பிராமணர்களே சாதியைப் படைத்தனர் எனும் கோட்பாடு அர்த்தமற்றதே. மனுவைப் பற்றி நான் விளக்கியதற்கும் மேலாக சொல்வதற்கு எதுவுமில்லை. பிராமணர்கள் பல வகைகளில் குற்றமிழைத்தவர்களாக இருக்கலாம்; குற்றமிழைத்தவர்கள்தான் என்று நான் துணிந்து கூறவும் செய்வேன். ஆனால், சாதி முறையைப் பிராமணர்கள், பிராமணரல்லாதோர் மீது திணித்தார்கள் என்பது உண்மையல்ல” என்கிறார்...- - -<தொடர்ச்சி>

தில்லை கோயில் பிரச்சினை குறித்து

- - -தமிழகத்தின் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நிலங்களிலிருந்து ஆற்று மணல், அரியவகை மண், மரங்கள் என இயற்கை வளங்களையெல்லாம் கொள்ளையடிக்க அனுமதித்துப் பங்கு பெற்று, நாட்டைப் பாலைவனமாக்கி, உலகப் பணக்காரர் பட்டியலை நோக்கிக் குறிவைத்துப் பயணம் செய்துகொண்டே, ஆறுமுகசாமிக்கு மாதம் ரூ. 3000 தந்து பாவ நிவர்த்தி வேண்டுகிறவர்கள்தாம் சமூகத்தில் கனன்று கொண்டிருக்கும் பல சமூகப் பிரச்சினைகளுக்கு மூல காரணமாக இருக்கிறார்கள்.....- - -<தொடர்ச்சி>

திராவிட இயக்கப் பகுத்தறிவு

- - -அதுதான் ‘பகுத்தறிவு மூடநம்பிக்கை'யில் ஆழ்ந்திருக்கும் / ஆழ்த்தப்பட்டிருக்கும் கூட்டம். திராவிட இயக்கம் அவர்களின் கோயில்; அதன் கருவறையில் இருக்கும் பெரியார் அவர்களின் கடவுள். இதே பாணியில், மார்க்ஸ் மூலவர், பெரியார் உற்சவ மூர்த்தி என்று சொல்கின்ற இன்னொரு பிரிவும் உண்டு. இவ்விரு சாராரையும் விட சமூகம் மிகப் பெரியது...- - -<தொடர்ச்சி>

வழக்குரைக்கும் மணிமேகலையும் தண்டிக்கத் துடிக்கும் தமிழ்க் காவலர்களும்

- - -நாகரிகம் - அநாகரிகம் என்பவையெல்லாம் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு விதமாகவே வரையறுக்கப்பட்டுள்ளன. மேலாடையே அணியாமல் ‘தொய்யில்’ என்ற வண்ண அலங்காரத்தால் மார்பகங்களை மறைப்பது(!)கூடச் சங்க காலத்தில் வழக்கில் இருந்ததுண்டு. எனவே, தமிழ்ப் பண்பாடு என்று ஒன்றைப் பொதுமைப்படுத்தி ஒற்றைப் பார்வையில் பார்ப்பதே அரைகுறையான புரிதலில் விளைவதாகும்.- - -<தொடர்ச்சி>

ஆரியக்கூத்தும் வேளாள மாயையும் (அ.மார்க்ஸ் கட்டுரைக்கான எதிர்வினை)

- - - திராவிட இயக்கத்தின் அந்தக் கருத்துதான் இன்றைக்கு வரையிலும் தமிழ்ச் சமூகத்தில் முழு ஆதிக்கம் செலுத்திவருகிறது. ஆனால், அக்கருத்தைக் கடந்து பல்வேறு உண்மைகள் இன்றைக்கு வெளிப்பட்டுள்ளனவேயன்றி அவை பொதுக் கருத்தாகிடவில்லை. உதாரணமாக அறிவியல் ஆய்வுகளின்படி காலாவதியாகிவிட்ட குமரிக்கண்ட கருத்தாக்கத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பவர்கள் இன்றைக்கும் இருக்கின்றனர்.- - -<தொடர்ச்சி>

தமிழ்ப் பற்றும் திராவிடப் பம்மாத்தும்

- - - ஆரியத்துக்கு எதிரானது திராவிடம் என்ற கருத்தியல் நிலைப்பாட்டை உருவாக்கி அதற்கு ஒரு சித்தாந்த வடிவத்தைக் கற்பித்தவர்கள் தமிழக வேளாளர்களே என்ற உண்மையைப் பட்டவர்த்தனமாகப் போட்டு உடைத்தவர் க.கைலாசபதி ஆவார். அதற்காகத் தமிழியல் ஆய்வுலகம் அவருக்குக் கடமைப்பட்டுள்ளது. இந்தக் கடமை உணர்வை வழிபாட்டு மனப்பான்மை என்று சொல்வது கட்டுரை ஆசிரியரின் வேளாளச் சார்பு நிலையை வெளிப்படையாகக் காட்டுகிறது. - - -<தொடர்ச்சி>

சத்திரிய இராமனும் பிராம்மண இராவணனும்

- - - இராமசேது என்பதைக் கற்பனை என்று சொல்லிக் கொண்டே, இராவணன் என்ற திராவிட மன்னன் வீழ்த்தப்பட்டது வரலாறு என்று புரட்டிப் பேசுகிற பாசிச மனப்போக்கு வரலாற்று ஆய்வு எனும் போர்வையில் இன்றைக்கும் தமிழகத்தில் ‘அரச மரியாதையுடன்' உலா வந்து கொண்டிருக்கிறது. சுருக்கமாக இதனைத் திராவிட மாயை என்றே சொல்லலாம். வரலாறு என்பது மிகவும் சிக்கலானது; வரலாற்று ஆய்வு என்பது மிகவும் நுட்பமானது. - - -<தொடர்ச்சி>

வரலாற்று நோக்கில் தமிழ்ச் சமூகமும் கள்ளும்

- - - அன்றைய நிலையில் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனும் கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவனும் (கண்ணகிக்குக் கோயில் கட்டிய அதே செங்குட்டுவன்தான்) குடிகாரர்கள் என்றால் ராமனும் குடிகாரன்தான். ஆனால் அவர்கள் ஊரெல்லாம் கள்ளுக் கடையையும் சாராயக் கடையையும் திறந்து ஆறாக ஒடவிட்டுத் தங்கள் கஜானாக்களை நிரப்பிக்கொண்டுத் தாங்கள் மட்டும் புனிதர் வேடம் போட்டுத் திரிந்தவர்கள் அல்லர். - - -<தொடர்ச்சி>

சித்திரையில்தான் புத்தாண்டு

இந்தியா ""தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்ற'' காலகட்டத்தில், ""நேரங் கெட்ட நேரத்தில்'' மேற்கொள்ளப்பட்ட காலங்கள் பற்றிய கணக்கீட்டில் ""தை மாதம்தான் தமிழர்களின் புத்தாண்டுப் பிறப்பு'' என்ற தவறான முடிவு விடையாகக் கிடைத்ததில் வியப்பில்லை. சார்பு நிலையால் ஏற்படும் மனமயக்கங்களில் ஆழ்ந்துவிடாமல் "சுதந்திர'மாக ஆராய்ந்தால் கிடைக்கும் விடை: "சித்திரையில்தான் புத்தாண்டு.''- - -<தொடர்ச்சி>