இக்கட்டுரையை அச்செடுக்க To print this article
தாமஸைக் கொன்றது யார்?
ஜி. சாமிநாதன் (ஆய்வாளர், தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்)
தாமஸ் தமிழ்நாட்டிற்கு வந்தாரா என்பதே பிரச்சினைக்குரியதாக இருக்கையில், அவர் அந்தணர்களால் கொல்லப்பட்டார் என்ற வழக்கு ஒன்றை ஜோடனை செய்து தீர்ப்புக் கூறுகின்ற அளவுக்கு வரலாற்றுப் ‘புள்ளி விவரங்களில்’ வல்லவர்களாகச் சிலர் தம்மைக் காட்டிக் கொள்கின்றனர்.

இது ஜாதி சமயக் காழ்ப்புடன்கூடிய தவறான குற்றச்சாட்டாகும். 13ஆம் நூற்றாண்டின் இறுதியில் தமிழ்நாட்டிற்கு வந்த மார்க்கோ போலோ, தம்முடைய பயணக் குறிப்புகளில் தமிழ்நாடு, கேரளம் இணைந்த பகுதியை மாபார் என்று குறிப்பிடுகிறார். “மாபாரில்தான் புனித தாமஸ், கோவி என்ற இனத்தவரால் (Govis) கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது” என்று அவர் எழுதியுள்ளார்.

கோவி என்ற இனம் இலங்கையில் இன்றும் உள்ளது. எனவே, தாமஸ் இந்தியாவிற்கு வந்தார் என்ற நம்பிக்கை சுமார் 1000 வருடங்களாக நிலவுவது போலவே, கோவி என்ற இனத்தவரால் கொல்லப்பட்டார் என்றும் நம்பப்படுகிறது. 16ஆம் நூற்றாண்டில் போர்ச்சுக்கீசியர்கள் கொங்கணக் கடற்கரையிலும், சென்னை சாந்தோமிலும் குடியேறியபோது இந்துக் கோயில்களை இடித்துத் தரைமட்டமாக்கியதோடு பல அந்தணர்களையும் மதம் மாற்ற முயற்சித்தனர். கொங்கணத்தில் அவர்கள் முயற்சி வெற்றி பெற்றது. தமிழ்நாட்டில் வெற்றிபெறவில்லை.

அந்த ஆத்திரத்திலும், ஆதங்கத்திலுமே தாமஸைக் கொன்ற பழியைக் கோவிகளிடமிருந்து மாற்றி அந்தணர்கள் தலையில் சுமத்தினர். எப்போதோ நடந்ததாகச் சொல்லப்பட்ட ஒரு சம்பவத்துக்குச் சம்பந்தமே இல்லாதவர்கள் குற்றவாளிகள் ஆக்கப்பட்ட கதை இதுதான். இது குறித்த விவரங்களுக்கு Travels of Marco Polo, அத்தியாயம் 17ஐப் பார்க்கவும்.

(நன்றி: தினமணி 24/07/2008, பக்கம் 6)

sami@sishri.org

SISHRI Home