இக்கட்டுரையை அச்செடுக்க To print this article
பேதக மறுத்தல்
எஸ். இராமச்சந்திரன் (ஆய்வாளர், தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்)
அர்ஜுன் சம்பத்தின் கட்டுரையின் நோக்கம் வீரமாமுனிவரின் தமிழ்ப்பணிகளை இருட்டடிப்பு செய்வதல்ல.

கட்டுரையின் இலக்கு இங்கு வாழ்ந்த வள்ளுவரையும் இங்கு வராத தாமஸையும் வரலாறு மூலம் இணைக்கும் பெரும் பிழைக்கு ஆதாரத்துடன் எதிர்ப்புத் தெரிவித்தலே.

எ, ஒ என்ற உயிர் எழுத்துகளிலும் அந்த உயிர் எழுத்துகள் ஏறிய உயிர்மெய் எழுத்துகளிலும் (கெ-கே,கொ-கோ போன்று) குறில், நெடிலை வேறுபடுத்திக் காட்டும் வடிவை முதலில் ஏற்படுத்தியவர் வீரமாமுனிவர் அல்லர். அவருக்கு முன்பே, 17-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ராணி மங்கம்மாள் காலத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வரையப்பட்ட ஓவியத்துக்கான விளக்க எழுத்துகளில் இக்குறில் நெடில் வேறுபாடு தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது என்பதை தொல்லியல் அறிஞர் நாகசாமி தனது ஒரு கட்டுரையில் ஆவணப்படுத்தியுள்ளார்.

அடுத்து, வீரமாமுனிவரின் காலத்துக்கு முன்பு 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிதம்பர ரேவண சித்தரால் அகர வரிசையில் அகராதி நிகண்டு உருவாக்கப்பட்டுவிட்டது. உ.வே.சா. நூலகம் அதை வெளியிட்டுள்ளது.

வரலாறு வீரமாமுனிவரின் தமிழ் முகத்தை மட்டுமல்ல...அவரது தலித் விரோத முகத்தையும், தமிழ் கிறிஸ்தவ விரோத முகத்தையும் சேர்த்துக் காட்டுகிறதே...

தலித் மகளிர் தொடர்பாக அவர் எழுதியுள்ள அவதூறான மொழியைப் பார்க்க அவரது "பேதக மறுத்தல்' என்ற நூலைப் பார்க்கவும்.

(தினமணி 18/07/2008, பக்கம் 6.)

sr@sishri.org

SISHRI Home