What we wrote...
எதிர்ப்பாட்டை ஏற்காத பாட்டு
அ. கணேசன்

ஜூ.வி. 22-10-2006 இதழில் "விஜயகாந்தின் கள்ளுக்கடை புரட்சி" பற்றி எதிர்பாட்டு பாடியுள்ள ரவிக்குமார் எம்.எல்.ஏ., விஜயகாந்த் கள்ளுக் கடையைத் திறப்பேன் என்று அறிவித்துள்ளது பெரிய வேடிக்கை என்றும், "புதிய பொருளாதாரக் கண்டுபிடிப்பு" என்றும் கேலியாக எழுதியுள்ளார். வெகுஜன அரசியலில் தாங்களே ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் செயல்படுவதும், மக்கள் பிரதிநிதியாக உருவாகக்கூடிய ஆற்றல் கொண்ட மாற்று அணியினரைக் கொச்சைப்படுத்துவதும், அவர்களை அரசியலிலிருந்து அப்புறப்படுத்தும் பின்-நவீனத்துவத் 'தீண்டாமை'யைக் கடைபிடிப்பதும் கண்டிக்கத்தக்கவை ஆகும். தம் கருத்துகளைத் தெரிவிப்பதற்கு மண்ணின் மைந்தரான விஜயகாந்துக்கு எல்லா உரிமையும் உண்டு. விமர்சனம் என்ற பெயரில் அவரது கருத்துகளைக் கொச்சைப்படுத்துவது கருத்துலக ஆதிக்க மனப்பான்மையையே காட்டுகிறது.

இதே கட்டுரையில், நாடார் சமூகத்தைப் பற்றிய சில தவறான வரலாற்றுக் குறிப்புகளை ரவிக்குமார் எழுதியுள்ளார். சாணார்கள் என்று அழைக்கப்பட்ட தங்கள் இனத்தை நாடார்கள் என்று மாற்ற வேண்டும் எனப் போராடி 1921ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுக்கின்போது அதனைச் சாதித்தவர்கள் அவர்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தச் செய்தி ஓர் அரைகுறை உண்மை ஆகும்.

நாடார் என்ற சொல் நாடாள்வார் என்ற சொல்லின் திரிபாகும். நாட்டை ஆள்பவர்கள் என்று பொருள்படும் இச்சொல் காலப்போக்கில் நாடாவார், நாடவார், நாடார் எனத் திரிந்துள்ளது. இதற்கான சில ஆதாரங்களாகக் கி.பி. 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருத்துறைப்பூண்டி வட்டம் வடகாடு கோயிலூர் கல்வெட்டு (Annual Report on Epigraphy 191/1908, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை 1978ஆம் ஆண்டில் பதிப்பித்த திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள் தொடர் எண் 198, வரி 253), கி.பி. 1507ஆம் ஆண்டைச் சேர்ந்த நாகர்கோவில் ஆதிமூல விநாயகர் கோயில் கல்வெட்டு (Travancore State Manual, திவான் பேஷ்கர் நாகமையா) மற்றும் கி.பி. 1644ஆம் ஆண்டைச் சேர்ந்த தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம் மடத்து அச்சம்பாடு கல்வெட்டு (வரலாறு இதழ் 9-10, பக்கம் 5-10, 1999-2000, இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மையம், திருச்சி - 17) ஆகியவற்றைக் காட்டமுடியும்.

மேற்குறித்த நாகர்கோவில், மடத்து அச்சம்பாடு கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் நாடாள்வார் குடும்பங்கள் இன்றைக்கும் நாடான் என்ற பட்டத்துடன் உள்ளன. நாடாள்வான், நாடான் என்ற பட்டங்கள் ஒன்றுக்குப் பிரதியாக மற்றொன்று பயன்படுத்தப்பட்டதற்கு 19ஆம் நூற்றாண்டு வரையிலான பல கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. எனவே, நாடார்கள் என்ற பட்டத்தை இச்சமூகத்தவர் அண்மைக் காலத்தில்தான் பயன்படுத்தத் தொடங்கினர் என்பது முற்றிலும் தவறான கருத்தாகும்.

மேலும், சாணார்கள் என்ற சொற்பிரயோகம் காலகாலமாக இழிவானதாகக் கருதப்பட்டது என்ற செய்தியும் தவறானதாகும். சான்றோர் அல்லது சான்றார் என்ற சாதிப்பெயர் பேச்சு வழக்கில் சாணார் எனத் திரிந்தது என்பதற்கு இலக்கிய ஆதாரங்களும், கல்வெட்டு ஆதாரங்களும் உள்ளன. சான்றாண்மை என்ற பண்பு அனைத்து வகை நற்குணங்களையும் ஆளும் தன்மை என்று திருக்குறள் உரையாசிரியர்களால் பொருள்படுத்தப்பட்டுள்ளது. வீரயுகப் பண்புகள் மிகுந்திருந்த சங்க காலத்தில் நாட்டை ஆண்ட தலைமக்கள் அறப்போர் முறையில் பயிற்சி பெற்றுத் தேர்ந்த உயர் வர்க்கப் போர்வீரர்களாக இருந்தனர்; அவர்கள் சான்றோர்கள் என அழைக்கப்பட்டனர்.

அத்தகைய பயிற்சி பெற்ற அறப்போர் முறைக்குப் பெரியபுராணம் குறிப்பிடும் ஏனாதி நாதரின் போர் முறையை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். ஏனாதி நாதர் சான்றார் குலத்தவர் ஆவார். சான்றோர் சமூகத்தவரின் குலத் தொழில் என்பது அறப்போர் மரபு, போர்ப் பயிற்சி, நாட்டை ஆள்தல், வருவாய்க் கணக்கு பராமரித்தல், நீதி நிர்வாகம் போன்றவை ஆகும். இதற்கும் ஏனாதி நாதர் புராணத்தில் ஆதாரம் உள்ளது. கோகர்ணம் முதல் கன்னியாகுமரி வரை பெருமாள் ராஜாக்கள் காலத்தில் (கி.பி. 12ஆம் நூற்றாண்டு வரை) வழக்கிலிருந்த மூழிக்களக்கச்சம் என்ற நிர்வாக நடைமுறைச் சட்டத்தை வகுத்து நடைமுறைப்படுத்தியவர்கள் சான்றார் குலத்தவரே ஆவர். கன்னியாகுமரி மாவட்டக் கல்வெட்டுகள் பலவற்றில் இதற்கான ஆதாரம் உள்ளது.

சான்றோர் சமூகப் போர்வீரர்களில் பனையேறிச் சான்றோர் என்ற பிரிவும் இருந்துள்ளது என்பது உண்மையே. இவர்கள் கள் இறக்கி நேரடியாகக் கொண்டு சென்று விற்றார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. கள்விலைஞர்களாக வலையர் குலப் பெண்டிரையே இலக்கிய உரையாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இக்குலத்தவருக்குப் பழையர் என்று பெயர். ("பகன்றைக் கண்ணிப் பழையர் மகளிர்" என்ற மலைபடுகடாம் வரி 459க்கான நச்சினார்க்கினியர் உரை, பக்கம் 650, பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், உ.வே.சா. நூலகப் பதிப்பு, 1974.) இந்தப் பனையேறிச் சான்றோர் பிரிவினர், போர்த் தொழில் தவிரப் பதநீர் இறக்குதல், கருப்புக்கட்டி காய்ச்சுதல் போன்றவற்றை உபதொழிலாகச் செய்திருக்கலாம். இவர்களில் சிலர் காலப்போக்கில் கள்ளிறக்கி விற்கும் தொழிலிலும் ஈடுபட்டிருக்க வேண்டும். எனவே, கள்ளிறக்கும் தொழிலில் சான்றார் சமூகத்தினர் நெடுங்காலமாக ஈடுபட்டு வந்திருக்கின்றனர் என்றோ, அந்த அடிப்படையிலேயே இழிவுபடுத்தப்பட்டனர் என்றோ கருதுவது மிகவும் தவறான ஒரு வாதமாகும்.

சாணார் என்ற சொல் இழிவாகக் கருதப்பட்டதற்கு என்ன காரணம்? சில சொற்கள் தொனிப்பொருளிலேயே பிறரால் இழிவாகக் கருதிப் பயன்படுத்தப்பட்டு இழிவுச் சுமையுடன் வழக்கில் நிலைத்து விடுவதுண்டு. பறையர் என்ற சொல்லே கூட அப்படிப்பட்டதுதான். இன்றைக்கு Pariah என்ற வழக்கு ஆங்கில அகராதியில்கூட இழிவான பொருளில் நுழைந்து குந்திக்கொண்டது. ஆனால், சங்க இலக்கியமான புறநானூற்றில் பறையர் குடி முதன்மையான குடிகளுள் ஒன்றாகவே சொல்லப்படுகிறது. "துடியன் பாணன் பறையன் கடம்பன் இந்நான்கல்லது குடியும் இல்லை" (புறம். 335). இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால், சங்க காலத் தமிழகத்தில் தாய்வழிச் சமூக அமைப்பிலேயே நீடித்து வந்த பல சமூகங்கள் ஓரிடத்தில் குந்தி அமர்வதற்குக்கூட வாய்ப்பின்றி அலைந்துகொண்டிருந்த நிலையில், தந்தை வழிச் சமூகமாக (குடியும் குடித்தனமுமாக) நிலைத்து வாழ்ந்த சமூகத்தவர்கள் பறையர்கள் ஆவர். அந்தச் சாதியின் பெயரே ஆண்பாலில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதனால்தான், திருவள்ளுவர் போன்ற ஒரு மாமனிதர் இச்சமூகத்தில் உருவாக முடிந்தது.

பறையன் என்ற சொல் சங்க காலத்தில் இழிவுத் தொனியுடன் பயன்படுத்தப்பட்டது அன்று என்பதையும், காலப்போக்கில் இழிவுத் தொனிப்பொருள் அந்தச் சொல்லுக்குள் குடியேறிவிட்டது என்பதையும் குறிப்பிடுவதற்காகவே இதனை எழுதுகிறோம். அது போன்றதுதான், சாணார் என்ற வழக்கும். தென்மாவட்டங்களில் பல சாதியினரைப் பற்றிக் குறிப்பிடும்போது சாதிப் பெயரைக் குறிப்பிடாமல், சாதிக்குரிய உயர்வான பட்டப்பெயர் சொல்லியே குறிப்பிடுவது இன்றும் நடைமுறையில் உள்ளது. பறையர் என்று சொல்லாமல் சாம்பவர் அல்லது சாம்பாக்கமார் என்றே குறிப்பிடுவர். சாம்பவர் என்பது சாதிப் பட்டமே தவிர சாதிப் பெயர் அன்று. இதே போன்றுதான் குடும்பமார் என்று தேவேந்திர குலத்தார் (பள்ளர்) சாதியினரையும், கோனார் அல்லது கோங்கமார் (கோன்கள்மார்) என்று இடையர் சமூகத்தவரையும், தேவமார் என்று மறவரையும், ஐயர்மார் என்று பிராமணர்களையும் குறிப்பிடுவதை இன்றும் வழக்கில் காணலாம். சாதிப் பெயரைச் சொல்வது அவ்வளவு உயர்வானதாகக் கருதப்படுவதில்லை. எனவே, சாணார் என்பதைவிட நாடாவார் (நாடார்) எனக் குறிப்பிடப்படுவதை இச் சாதியினர் ஏற்றனர்.

"சாணார் சமூகத்துப் பெண்கள் மேலாடை போடக்கூடாது என்றிருந்த சமூகக் கொடுமை அவர்களது நீண்ட நெடிய போராட்டத்தால் ஒழிக்கப்பட்டது. அதை ஒழித்ததில் கிறிஸ்தவ மத போதகர்களுக்கு முக்கியமான பங்குண்டு" என்று ரவிக்குமார் குறிப்பிட்டுள்ளார். இதுவும் ஓர் அரைகுறை உண்மையாகும். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புதிய ஆதிக்க சக்தியாக விளங்கிய நாயர்-வேளாளர் கூட்டணியினர் தங்கள் சமூகத்துப் பெண்டிரைப் போலவே மார்பிலிருந்து கணுக்கால் வரை மறைக்கும் வண்ணம் ஒற்றை ஆடையான முண்டு மட்டுமே சான்றார் சமூகத்துப் பெண்களும் உடுத்த வேண்டும் என்று அடக்குமுறையில் ஈடுபட முனைந்தனர். அல்லது இடுப்பு வரை முண்டு, மார்புப் பகுதியில் ரவிக்கை அணிந்து கொள்ளலாம். ரவிக்கைக்கு மேல் முன்தானை அணிவதாக இருந்தால்கூட அதனை (இன்றைக்கு அணிவது போல) தோளுக்கு மேல் குறுக்காக அணியக்கூடாது என்றும், தோளுக்குக் கீழேயே (கட்கத்துக்குக் கீழே மார்பைச் சுற்றிவரும் வண்ணம்) ரவிக்கையைச் சுற்றி அணியவேண்டும் என்றும் வலியுறுத்தினர். ரவிக்கையும் அதன்மேல் தோளுக்குக் குறுக்காக முன்தானையும் அணிந்த சான்றோர் சாதிப் பெண்களை இழிவுபடுத்தத் தொடங்கினர். சான்றோர் சாதியினர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். புராடஸ்டண்ட் கிறிஸ்தவ மிஷனரிமார் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு சான்றோர் சமூகத்தவரை பெரும் எண்ணிக்கையில் மதம் மாற்றினர். இதுவே உண்மை வரலாறு ஆகும்.

தோள்சீலைப் போராட்டம் என்று சொல்வதை அரைகுறையாகப் புரிந்து கொண்டு சான்றோர் சமூகத்துப் பெண்டிர் மார்பை மறைக்காமலேயே இருந்தனர் என்றும், அவர்கள் கிறிஸ்தவ மத போதகர்கள் போதனையால் விழிப்புணர்ச்சி பெற்று மார்பை ஆடையால் மறைக்கத் தொடங்கினர் என்றும் பொருள்படும் வண்ணம் பலர் எழுதி வருகின்றனர். இது ஒரு கருத்து மோசடியாகும். Samuel Mateer என்ற புராடஸ்டண்ட் பாதிரியார் (ஆங்கிலேயர்) The Land of Charity - A descriptive account of Travancore and its people with especial reference to Missionary Labor என்ற நூலை எழுதியுள்ளார். இந்த நூல் 1870ஆம் ஆண்டில் லண்டனிலுள்ள John Snow & Companyயால் பதிப்பிக்கப்பட்டது. இந்நூலில் தோள்சீலைக் கலவரம் பற்றிய மேற்குறித்த விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

தஞ்சை அரண்மனையில் சரபோஜி மன்னர் காலத்தில் (1798-1832) வரையப்பட்ட ஓவியம் ஒன்றின் நிழற்படம், சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்த விகடன் தீபாவளி மலரில் வெளியிடப்பட்டுள்ளது. (நிழற்படப் பிரதி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.) அரை நூற்றாண்டு கடந்த பின்னர் தீபாவளி நேரத்தில் இதை நினைவுபடுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தோள்சீலைக் கலவரம் தீவிரமாக நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில் தஞ்சையில் சரபோஜி மன்னரின் ஆட்சியில் நாடார் சமூகத்துப் பெண்டிர் இன்றைய பெண்டிரைப் போலவே முழுமையாக உடையணிந்திருப்பதைக் காணலாம். இந்தப் படத்தின் தலைப்பாக "பண்டாரி (கள் இறக்குவோர்)" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 19ஆம் நூற்றாண்டில் தஞ்சைப் பிரதேசத்தில் சாணார் சமூகத்தவர் என்றால் கள்ளிறக்குவோர் என்றுதான் பொருள்கொள்ளப்பட்டது என்பது உண்மையே. அதனால்தான் படத்தின் தலைப்பில் இப்பெயர் இடம்பெற்றுள்ளது.

17ஆம் நூற்றாண்டில்கூட திருவாரூர், முகந்தனூர் ஆகிய இடங்களில் சான்றோர் சமுகத்தவரால் பண்டாரி என்ற சாதிப் பட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. 19ஆம் நூற்றாண்டில் சரபோஜி மன்னர் காலத்தில் இந்த சாதிப் பட்டம் தஞ்சாவூர்ப் பகுதியில் பயன்படுத்தப்பட்டதா என்பது நமக்குத் தெரியவில்லை. பண்டாரி என்பது மராட்டிய மாநிலத்தில் சான்றோர் சமூகத்தவருக்கு இன்றளவும் வழங்குகின்ற பட்டப் பெயராகும். தஞ்சை மராட்டியர்கள் தங்களுடைய முன்னோர்களின் பிரதேசமாகிய மராட்டிய மாநிலத்தில் வழங்கி வருகின்ற ஒரு வழக்காற்றினைக் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்றும் இதற்குப் பொருள் கொள்ளலாம். பண்டாரி என்ற சொல்லின் நேர்ப்பொருள் அரசு கருவூல அதிகாரி என்பதாகும். அரசு நிதித் துறை மற்றும் கருவூலத் துறைச் செயலருக்குச் சமமான பதவி பண்டாரி ஆகும். அரசின் கருவூலத்தில் வருவாய் ஈட்டும் இனங்களில் கள் என்பதும் முதன்மையான ஒன்றாகும். கள்ளினைச் சேகரித்து விற்கும் அரசுத்துறையின் பொறுப்பாளர் பண்டாரி எனக் குறிப்பிடப்பட்டிருக்கலாம். அந்த அடிப்படையில் பண்டாரி என்றால் கள் இறக்குவோர் என்ற தொடர்பு ஏற்பட்டிருவும் வாய்ப்புண்டு. 1800ஆம் ஆண்டில் தஞ்சாவூர்ப் பிரதேசத்தைப் பூர்விகமாகக் கொண்ட புராடஸ்டண்ட் கிறிஸ்தவ நாடார்கள் நெல்லை சீமையிலுள்ள திருச்செந்தூருக்கு அருகில் குதிரைமொழித்தேரியை அடுத்துள்ள வாழையடி வகுத்தான் குப்பம் என்ற ஊரில் மிஷனரிமார்களால் குடியேற்றப்பட்டனர். அந்தப் புதிய குடியேற்றத்துக்கு நாசரேத் என்ற பெயரையும் சூட்டினர். ஒப்பீட்டளவில் திருவிதாங்கூர் பகுதி போல சான்றோர் சமூகத்துக்கு எதிரான இயக்கங்கள் எவையும் நடைபெறாத தஞ்சாவூர்ப் பிரதேசத்தில் சான்றோர் சமூகத்தவர் புராடஸ்டண்ட் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியுள்ளனர் என்றால் அது சமூக கொடுமைகளின் விளைவு என்று குறிப்பிடுவது சரிதானா? இதில் அரசியல் காரணங்களே முதன்மையான பங்கு வகித்துள்ளன என்பது உறுதி. இதுபோன்ற ஏராளமான சான்றுகளையும், ஆய்வுக் குறிப்புகளையும் குறிப்பிட முடியும்.

இறுதியாக ரவிக்குமார் அவர்களுக்கு ஒன்றைத் தெரிவிக்க விரும்புகிறோம். விஜயகாந்த் தமிழக அரசியலில் ஒரு மாற்றுச் சக்தியாக உருவாகி வருகிறார். சில பகுதிகளில் அவருக்கு ஆதரவளிக்கச் சான்றோர் சமூக இளைஞர்களும் ஆர்வமாக முன்வருகின்றனர். இது வருந்தத்தக்கதோ, பரிகசிக்கத்தக்கதோ அன்று. சான்றோர் சமூகத்தவர்கள் எதையும் அலசி ஆராய்ந்து சுயமாக முடிவெடுக்கும் திறன் பெற்றவர்கள். மந்தை மனப்பான்மையுடன், கண்மூடித்தனமாகச் செயல்படுபவர்கள் அல்லர். எனவே, இதைக் குறித்து ரவிக்குமார் கவலைப்படத் தேவையில்லை.

What they published...
ரவிக்குமார் கவலைப்பட வேண்டாம்
அ. கணேசன்

ஜூ.வி. 22.10.2006-ம் தேதியிட்ட இதழில் 'விஜயகாந்தின் கள்ளுக்கடைப் புரட்சி' பற்றி எதிர்ப்பாட்டு பாடியுள்ள ரவிக்குமார் எம்.எல்.ஏ. எம்.எல்.ஏ., விஜயகாந்த் கள்ளுக் கடையைத் திறப்பேன் என்று அறிவித்துள்ளது பெரிய வேடிக்கை என்றும், "புதிய பொருளாதாரக் கண்டுபிடிப்பு" என்றும் கேலியாக எழுதியுள்ளார். வெகுஜன அரசியலில் தாங்களே ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் செயல்படுவதும், மக்கள் பிரதிநிதியாக உருவாகக்கூடிய ஆற்றல் கொண்ட மாற்று அணியினரைக் கொச்சைப்படுத்துவதும், அவர்களை அரசியலிலிருந்து அப்புறப்படுத்தும் பின்-நவீனத்துவத் 'தீண்டாமை'யைக் கடைபிடிப்பதும் கண்டிக்கத்தக்கவை ஆகும். தம் கருத்துகளைத் தெரிவிப்பதற்கு மண்ணின் மைந்தரான விஜயகாந்துக்கு எல்லா உரிமையும் உண்டு. விமர்சனம் என்ற பெயரில் அவரது கருத்துகளைக் கொச்சைப்படுத்துவது கருத்துலக ஆதிக்க மனப்பான்மையையே காட்டுகிறது.

இதே கட்டுரையில்,
நாடார் சமூகத்தைப் பற்றிய சில தவறான வரலாற்றுக் குறிப்புகளை எழுதியுள்ளார். 'சாணார்கள்' என்று அழைக்கப்பட்ட தங்கள் இனத்தை, 'நாடார்கள்' என்று மாற்ற வேண்டும் எனப் போராடி 1921-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது அதனைச் சாதித்தவர்கள் அவர்கள் என்று ரவிக்குமார் குறிப்பிட்டுள்ளார். இந்தச் செய்தி ஓர் அரைகுறை உண்மையாகும்.

'நாடார்' என்ற சொல் 'நாடாள்வார்' என்ற சொல்லின் திரிபாகும். 'நாட்டை ஆள்பவர்கள்' என்று பொருள்படும் இச்சொல், காலப்போக்கில் 'நாடாவார்', 'நாடவார்', 'நாடார்' எனத் திரிந்துள்ளது. இதற்கான சில ஆதாரங்களாகக் கி.பி. 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருத்துறைப்பூண்டி வட்டம் வடகாடு கோயிலூர் கல்வெட்டு (Annual Report on Epigraphy 191/1908, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை 1978ஆம் ஆண்டில் பதிப்பித்த திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள் தொடர் எண் 198, வரி 253), கி.பி. 1507ஆம் ஆண்டைச் சேர்ந்த நாகர்கோவில் ஆதிமூல விநாயகர் கோயில் கல்வெட்டு (Travancore State Manual, திவான் பேஷ்கர் நாகமையா) மற்றும் கி.பி. 1644ஆம் ஆண்டைச் சேர்ந்த தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம் மடத்து அச்சம்பாடு கல்வெட்டு (வரலாறு இதழ் 9-10, பக்கம் 5-10, 1999-2000, இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மையம், திருச்சி - 17) ஆகியவற்றைக் காட்டமுடியும்.

மேற்குறித்த நாகர்கோவில், மடத்து அச்சம்பாடு கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் நாடாள்வார் குடும்பங்கள் இன்றைக்கும் நாடான் என்ற பட்டத்துடன் உள்ளன.
'நாடாள்வான்', 'நாடான்' என்ற பட்டங்கள் ஒன்றுக்குப் பிரதியாக மற்றொன்று பயன்படுத்தப்பட்டதற்கு 19-ம் நூற்றாண்டு வரையிலான பல கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. எனவே, 'நாடார்கள்' என்ற பட்டத்தை இச்சமூகத்தவர் அண்மைக் காலத்தில்தான் பயன்படுத்தத் தொடங்கினர் என்பது முற்றிலும் தவறான கருத்தாகும்.

மேலும், 'சாணார்கள்' என்ற சொற்பிரயோகமும், காலங்காலமாக இழிவானதாகக் கருதப்பட்டது என்ற செய்தியும் தவறானதாகும். சான்றோர் என்ற சாதிப்பெயர் பேச்சு வழக்கில் 'சாணார்' எனத் திரிந்தது என்பதற்கு இலக்கிய ஆதாரங்களும், கல்வெட்டு ஆதாரங்களும் உள்ளன. சான்றோர் அல்லது சான்றார் என்ற சாதிப்பெயர் பேச்சு வழக்கில் சாணார் எனத் திரிந்தது என்பதற்கு இலக்கிய ஆதாரங்களும், கல்வெட்டு ஆதாரங்களும் உள்ளன. சான்றாண்மை என்ற பண்பு அனைத்து வகை நற்குணங்களையும் ஆளும் தன்மை என்று திருக்குறள் உரையாசிரியர்களால் பொருள்படுத்தப்பட்டுள்ளது. வீரயுகப் பண்புகள் மிகுந்திருந்த சங்க காலத்தில் நாட்டை ஆண்ட தலைமக்கள் அறப்போர் முறையில் பயிற்சி பெற்றுத் தேர்ந்த உயர் வர்க்கப் போர்வீரர்களாக இருந்தனர்; அவர்கள் சான்றோர்கள் என அழைக்கப்பட்டனர்.

அத்தகைய பயிற்சி பெற்ற அறப்போர் முறைக்குப் பெரியபுராணம் குறிப்பிடும் ஏனாதி நாதரின் போர் முறையை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். ஏனாதி நாதர் சான்றார் குலத்தவர் ஆவார்.
சான்றோர் சமூகத்தவரின் குலத் தொழில் என்பது அறப்போர் மரபு, போர்ப் பயிற்சி, நாட்டை ஆள்தல், வருவாய்க் கணக்கு பராமரித்தல், நீதி நிர்வாகம் போன்றவை ஆகும். இதற்கும் ஏனாதி நாதர் புராணத்தில் ஆதாரம் உள்ளது. கோகர்ணம் முதல் கன்னியாகுமரி வரை பெருமாள் ராஜாக்கள் காலத்தில் (கி.பி. 12ஆம் நூற்றாண்டு வரை) வழக்கிலிருந்த மூழிக்களக்கச்சம் என்ற நிர்வாக நடைமுறைச் சட்டத்தை வகுத்து நடைமுறைப்படுத்தியவர்கள் சான்றார் குலத்தவரே ஆவர். கன்னியாகுமரி மாவட்டக் கல்வெட்டுகள் பலவற்றில் இதற்கான ஆதாரம் உள்ளது.

சான்றோர் சமூகப் போர்வீரர்களில் பனையேறிச் சான்றோர் என்ற பிரிவும் இருந்துள்ளது என்பது உண்மையே. இவர்கள் கள் இறக்கி நேரடியாகக் கொண்டு சென்று விற்றார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. கள்விலைஞர்களாக வலையர் குலப் பெண்டிரையே இலக்கிய உரையாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இக்குலத்தவருக்குப் பழையர் என்று பெயர். ("பகன்றைக் கண்ணிப் பழையர் மகளிர்" என்ற மலைபடுகடாம் வரி 459க்கான நச்சினார்க்கினியர் உரை, பக்கம் 650, பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், உ.வே.சா. நூலகப் பதிப்பு, 1974.) இந்தப் பனையேறிச் சான்றோர் பிரிவினர், போர்த் தொழில் தவிரப் பதநீர் இறக்குதல், கருப்புக்கட்டி காய்ச்சுதல் போன்றவற்றை உபதொழிலாகச் செய்திருக்கலாம். இவர்களில் சிலர் காலப்போக்கில் கள்ளிறக்கி விற்கும் தொழிலிலும் ஈடுபட்டிருக்க வேண்டும். எனவே, கள்ளிறக்கும் தொழிலில் சான்றார் சமூகத்தினர் நெடுங்காலமாக ஈடுபட்டு வந்திருக்கின்றனர் என்றோ, அந்த அடிப்படையிலேயே இழிவுபடுத்தப்பட்டனர் என்றோ கருதுவது மிகவும் தவறான ஒரு வாதமாகும்.

சாணார் என்ற சொல் இழிவாகக் கருதப்பட்டதற்கு என்ன காரணம்? சில சொற்கள் தொனிப்பொருளிலேயே பிறரால் இழிவாகக் கருதிப் பயன்படுத்தப்பட்டு இழிவுச் சுமையுடன் வழக்கில் நிலைத்து விடுவதுண்டு. பறையர் என்ற சொல்லே கூட அப்படிப்பட்டதுதான். இன்றைக்கு Pariah என்ற வழக்கு ஆங்கில அகராதியில்கூட இழிவான பொருளில் நுழைந்து குந்திக்கொண்டது. ஆனால், சங்க இலக்கியமான புறநானூற்றில் பறையர் குடி முதன்மையான குடிகளுள் ஒன்றாகவே சொல்லப்படுகிறது. "துடியன் பாணன் பறையன் கடம்பன் இந்நான்கல்லது குடியும் இல்லை" (புறம். 335). இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால், சங்க காலத் தமிழகத்தில் தாய்வழிச் சமூக அமைப்பிலேயே நீடித்து வந்த பல சமூகங்கள் ஓரிடத்தில் குந்தி அமர்வதற்குக்கூட வாய்ப்பின்றி அலைந்துகொண்டிருந்த நிலையில், தந்தை வழிச் சமூகமாக (குடியும் குடித்தனமுமாக) நிலைத்து வாழ்ந்த சமூகத்தவர்கள் பறையர்கள் ஆவர். அந்தச் சாதியின் பெயரே ஆண்பாலில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதனால்தான், திருவள்ளுவர் போன்ற ஒரு மாமனிதர் இச்சமூகத்தில் உருவாக முடிந்தது.

பறையன் என்ற சொல் சங்க காலத்தில் இழிவுத் தொனியுடன் பயன்படுத்தப்பட்டது அன்று என்பதையும், காலப்போக்கில் இழிவுத் தொனிப்பொருள் அந்தச் சொல்லுக்குள் குடியேறிவிட்டது என்பதையும் குறிப்பிடுவதற்காகவே இதனை எழுதுகிறோம். அது போன்றதுதான், சாணார் என்ற வழக்கும். தென்மாவட்டங்களில் பல சாதியினரைப் பற்றிக் குறிப்பிடும்போது சாதிப் பெயரைக் குறிப்பிடாமல், சாதிக்குரிய உயர்வான பட்டப்பெயர் சொல்லியே குறிப்பிடுவது இன்றும் நடைமுறையில் உள்ளது. பறையர் என்று சொல்லாமல் சாம்பவர் அல்லது சாம்பாக்கமார் என்றே குறிப்பிடுவர். சாம்பவர் என்பது சாதிப் பட்டமே தவிர சாதிப் பெயர் அன்று. இதே போன்றுதான் குடும்பமார் என்று தேவேந்திர குலத்தார் (பள்ளர்) சாதியினரையும், கோனார் அல்லது கோங்கமார் (கோன்கள்மார்) என்று இடையர் சமூகத்தவரையும், தேவமார் என்று மறவரையும், ஐயர்மார் என்று பிராமணர்களையும் குறிப்பிடுவதை இன்றும் வழக்கில் காணலாம். சாதிப் பெயரைச் சொல்வது அவ்வளவு உயர்வானதாகக் கருதப்படுவதில்லை. எனவே, சாணார் என்பதைவிட நாடாவார் (நாடார்) எனக் குறிப்பிடப்படுவதை இச் சாதியினர் ஏற்றனர்.

"சாணார் சமூகத்துப் பெண்கள் மேலாடை போடக்கூடாது என்றிருந்த சமூகக் கொடுமை அவர்களது நீண்ட நெடிய போராட்டத்தால் ஒழிக்கப்பட்டது. அதை ஒழித்ததில் கிறிஸ்தவ மத போதகர்களுக்கு முக்கியமான பங்குண்டு" என்று ரவிக்குமார் குறிப்பிட்டுள்ளார். இதுவும் ஓர் அரைகுறை உண்மையாகும். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புதிய ஆதிக்க சக்தியாக விளங்கிய நாயர்-வேளாளர் கூட்டணியினர் தங்கள் சமூகத்துப் பெண்டிரைப் போலவே மார்பிலிருந்து கணுக்கால் வரை மறைக்கும் வண்ணம் ஒற்றை ஆடையான முண்டு மட்டுமே சான்றார் சமூகத்துப் பெண்களும் உடுத்த வேண்டும் என்று அடக்குமுறையில் ஈடுபட முனைந்தனர். அல்லது இடுப்பு வரை முண்டு, மார்புப் பகுதியில் ரவிக்கை அணிந்து கொள்ளலாம். ரவிக்கைக்கு மேல் முன்தானை அணிவதாக இருந்தால்கூட அதனை (இன்றைக்கு அணிவது போல) தோளுக்கு மேல் குறுக்காக அணியக்கூடாது என்றும், தோளுக்குக் கீழேயே (கட்கத்துக்குக் கீழே மார்பைச் சுற்றிவரும் வண்ணம்) ரவிக்கையைச் சுற்றி அணியவேண்டும் என்றும் வலியுறுத்தினர். ரவிக்கையும் அதன்மேல் தோளுக்குக் குறுக்காக முன்தானையும் அணிந்த சான்றோர் சாதிப் பெண்களை இழிவுபடுத்தத் தொடங்கினர். சான்றோர் சாதியினர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். புராடஸ்டண்ட் கிறிஸ்தவ மிஷனரிமார் மற்றொரு மதத்தைச் சேர்ந்த சிலர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு சான்றோர் சமூகத்தவரை பெரும் எண்ணிக்கையில் மதம் மாற்றினர். இதுவே உண்மை வரலாறு ஆகும்.

தோள்சீலைப் போராட்டம் என்று சொல்வதை அரைகுறையாகப் புரிந்து கொண்டு சான்றோர் சமூகத்துப் பெண்டிர் மார்பை மறைக்காமலேயே இருந்தனர் என்றும், அவர்கள் கிறிஸ்தவ மத போதகர்கள் போதனையால் விழிப்புணர்ச்சி பெற்று மார்பை ஆடையால் மறைக்கத் தொடங்கினர் என்றும் பொருள்படும் வண்ணம் பலர் எழுதி வருகின்றனர். இது ஒரு கருத்து மோசடியாகும். Samuel Mateer என்ற புராடஸ்டண்ட் பாதிரியார் (ஆங்கிலேயர்) The Land of Charity - A descriptive account of Travancore and its people with especial reference to Missionary Labor என்ற நூலை எழுதியுள்ளார். இந்த நூல் 1870ஆம் ஆண்டில் லண்டனிலுள்ள John Snow & Companyயால் பதிப்பிக்கப்பட்டது. இந்நூலில் தோள்சீலைக் கலவரம் பற்றிய மேற்குறித்த விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

தஞ்சை அரண்மனையில் சரபோஜி மன்னர் காலத்தில் (1798-1832) வரையப்பட்ட ஓவியம் ஒன்றின் நிழற்படம், சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்த விகடன் தீபாவளி மலரில் வெளியிடப்பட்டுள்ளது. (நிழற்படப் பிரதி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.) அரை நூற்றாண்டு கடந்த பின்னர் தீபாவளி நேரத்தில் இதை நினைவுபடுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தோள்சீலைக் கலவரம் தீவிரமாக நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில் தஞ்சையில் சரபோஜி மன்னரின் ஆட்சியில் நாடார் சமூகத்துப் பெண்டிர் இன்றைய பெண்டிரைப் போலவே முழுமையாக உடையணிந்திருப்பதைக் காணலாம். இந்தப் படத்தின் தலைப்பாக "பண்டாரி (கள் இறக்குவோர்)" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 19ஆம் நூற்றாண்டில் தஞ்சைப் பிரதேசத்தில் சாணார் சமூகத்தவர் என்றால் கள்ளிறக்குவோர் என்றுதான் பொருள்கொள்ளப்பட்டது என்பது உண்மையே. அதனால்தான் படத்தின் தலைப்பில் இப்பெயர் இடம்பெற்றுள்ளது.

17ஆம் நூற்றாண்டில்கூட திருவாரூர், முகந்தனூர் ஆகிய இடங்களில் சான்றோர் சமுகத்தவரால் பண்டாரி என்ற சாதிப் பட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. 19ஆம் நூற்றாண்டில் சரபோஜி மன்னர் காலத்தில் இந்த சாதிப் பட்டம் தஞ்சாவூர்ப் பகுதியில் பயன்படுத்தப்பட்டதா என்பது நமக்குத் தெரியவில்லை. பண்டாரி என்பது மராட்டிய மாநிலத்தில் சான்றோர் சமூகத்தவருக்கு இன்றளவும் வழங்குகின்ற பட்டப் பெயராகும். தஞ்சை மராட்டியர்கள் தங்களுடைய முன்னோர்களின் பிரதேசமாகிய மராட்டிய மாநிலத்தில் வழங்கி வருகின்ற ஒரு வழக்காற்றினைக் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்றும் இதற்குப் பொருள் கொள்ளலாம். பண்டாரி என்ற சொல்லின் நேர்ப்பொருள் அரசு கருவூல அதிகாரி என்பதாகும். அரசு நிதித் துறை மற்றும் கருவூலத் துறைச் செயலருக்குச் சமமான பதவி பண்டாரி ஆகும். அரசின் கருவூலத்தில் வருவாய் ஈட்டும் இனங்களில் கள் என்பதும் முதன்மையான ஒன்றாகும். கள்ளினைச் சேகரித்து விற்கும் அரசுத்துறையின் பொறுப்பாளர் பண்டாரி எனக் குறிப்பிடப்பட்டிருக்கலாம். அந்த அடிப்படையில் பண்டாரி என்றால் கள் இறக்குவோர் என்ற தொடர்பு ஏற்பட்டிருவும் வாய்ப்புண்டு. 1800ஆம் ஆண்டில் தஞ்சாவூர்ப் பிரதேசத்தைப் பூர்விகமாகக் கொண்ட புராடஸ்டண்ட் கிறிஸ்தவ நாடார்கள் நெல்லை சீமையிலுள்ள திருச்செந்தூருக்கு அருகில் குதிரைமொழித்தேரியை அடுத்துள்ள வாழையடி வகுத்தான் குப்பம் என்ற ஊரில் மிஷனரிமார்களால் குடியேற்றப்பட்டனர். அந்தப் புதிய குடியேற்றத்துக்கு நாசரேத் என்ற பெயரையும் சூட்டினர். ஒப்பீட்டளவில் திருவிதாங்கூர் பகுதி போல சான்றோர் சமூகத்துக்கு எதிரான இயக்கங்கள் எவையும் நடைபெறாத தஞ்சாவூர்ப் பிரதேசத்தில் சான்றோர் சமூகத்தவர் புராடஸ்டண்ட் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியுள்ளனர் என்றால் அது சமூக கொடுமைகளின் விளைவு என்று குறிப்பிடுவது சரிதானா? இதில் அரசியல் காரணங்களே முதன்மையான பங்கு வகித்துள்ளன என்பது உறுதி. இதுபோன்ற ஏராளமான சான்றுகளையும், ஆய்வுக் குறிப்புகளையும் குறிப்பிட முடியும்.

இறுதியாக ரவிக்குமார் அவர்களுக்கு ஒன்றைத் தெரிவிக்க விரும்புகிறோம். விஜயகாந்த் தமிழக அரசியலில் ஒரு மாற்றுச் சக்தியாக உருவாகி வருகிறார். சில பகுதிகளில் அவருக்கு ஆதரவளிக்கச் சான்றோர் சமூக இளைஞர்களும் ஆர்வமாக முன்வருகின்றனர். இது வருந்தத்தக்கதோ, பரிகசிக்கத்தக்கதோ அன்று. சான்றோர் சமூகத்தவர்கள் எதையும் அலசி ஆராய்ந்து சுயமாக முடிவெடுக்கும் திறன் பெற்றவர்கள். மந்தை மனப்பான்மையுடன், கண்மூடித்தனமாகச் செயல்படுபவர்கள் அல்லர். எனவே, இதைக் குறித்து ரவிக்குமார் கவலைப்படத் தேவையில்லை.

(Courtesy: Junior Vikatan, 1-11-2006, Page 22 )